இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பதிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், கேரளாவில் 9 பேர், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா 3 பேர், உத்தரபிரதேசத்தில் 2 பேர் மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் தலா ஒருவர் என 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 6,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,232ஆக குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India 3611 new covid cases in 24 hours


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->