ஆந்திரா : முதலிரவு நடக்காததை வெளியில் சொன்ன மனைவி - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களின் மகன் சரவணன். பி.டெக் படித்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது.

இந்த நிலையில் சரவணனுக்கும், ருக்மணி என்ற பெண்ணுக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவருக்கும் முறைப்படி ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சரவணனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாததால் முதலிரவு நடக்கவில்லை.

இதனால் அதிர்ந்துபோன ருக்மணி முதலிரவு நடக்காதது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இவர்கள் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இதைக்கேட்ட அவர்கள் சரவணனை கிண்டல் செய்துள்ளனர். இதனால் சரவணனுக்கு மனைவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால்,  சரவணன் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சரவணன் தன் தந்தையுடன் சேர்ந்து ருக்மணி மற்றும் அவரது பெற்றோர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அதன் படி சரவணன் மனைவி மற்றும் அவரது பெற்றோரை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் சரவணன் மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
இதேபோல் ருக்மணியின் பெற்றோர்களை சரவணனின் தந்தை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது ருக்மணியின் தந்தை மட்டும் ரத்த காயங்களுடன் வெளியில் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் ருக்மணியின் தாயார் வீட்டிற்குள் சிக்கிகொண்டதனால், உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தகாயத்துடன் வெளியில் ஓடிவந்த ருக்மணியின் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வீட்டின் உள்ளே உயிரிழந்த ருக்மணி மற்றும் அவரது தாயாரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband arrested for kill wife and mother in law in andira


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->