பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி! நிரூபித்தால் பரிசு தொகை! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் பிராய்லர் கோழிகளை வளர்பதற்கு ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழிகளை நாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. 

நாடு முழுவதும் பரவி வரும் இந்த கருத்தால் பிராய்லர் கோழிகளின் விற்பனை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியம் பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பாதிக்கப்படும் என்ற கருத்தை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர். 

மேலும் பிராய்லர் கோழியில் புரத சத்து அதிகம் இருப்பதால் அதன் மூலம் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிராய்லர் கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஹார்மோன் ஊசி மூலம் வளர்க்கப்படுகிறது என்பதை நிரூபணம் செய்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், ''பிராய்லர் கோழி இறைச்சியை அசைவ பிரியர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். 

இது குறித்து நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருவதால் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது அதற்கான பதிலடியாக இருக்கும்'' என தெரிவித்துள்ளனர். 

'ஹார்மோன்கள்தான் பிராய்லர் கோழிகளின் வளர்ச்சி என தெரிவிப்பது தவறானது. இதில் செறிவூட்டப்பட்ட தீவனம், நோய் தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற காரணிகளே முக்கிய அங்கமாக உள்ளது' என பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hormone injection broiler chicken prove reward


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->