#உத்தரபிரதேசம் || 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றிய மருத்துவமனை!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் லாலா லஜ்பத் ராய் அரசு மருத்துவமனையில்180-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ரத்தம் மாற்றுதல் சிகிச்சை வழங்கப்பட்டது. அதில் 14 குழந்தைகளுக்கு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி வைரஸ்களுக்கான சோதனை நடத்தப்பட்டபோது தவறு நேர்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரத்த மாற்றத்தின் போது மருத்துவர்கள் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போடவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HIV blood transfusion to 14 children in Uttrapradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->