ஹிமாச்சல பிரதேச தேர்தல் : தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


இமாச்சலபிரதேச மாநிலத்தில் வரும் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் தலைநகர் சிம்லாவில் வெளியிட்டுள்ளது.

ஹிமாச்சல மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வீட்டிற்கு 300 யூனிட் இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும், ஒரு வீட்டிற்கு தலா நான்கு மாடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்,

ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.10 கோடி 'ஸ்டார்ட்அப் பண்ட்' நிதி மையம் திறக்கப்படும், பால் பண்ணையில் ஈடுபடுபவர்களிடமிருந்து 10 லிட்டர் பாலை அரசு கொள்முதல் செய்யும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்தை அரசு செயல்படுத்தும், ஆப்பிள் விவசாயிகளுக்காக அரசு ஒரு குழுவை அமைக்கும் என பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

மேலும், இதுகுறித்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் தானி ராம் ஷண்டில் தெரிவித்ததாவது, "இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, இமாசல பிரதேச மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh election report allounce congrass


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->