அரியானா : செல்லப்பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகர் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்துள்ளது ஜிலே சிங் காலனி. இந்த காலனியில் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா.

இதில், மணிதா கடந்த 8 ஆண்டுகளாக ஷெரு என்ற பெயருடைய ஆண் நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். இதேபோல், சவிதா என்பவரும் ஸ்வீட்டி என்ற பெயருடைய பெண் நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். அதன்படி, 25 திருமண பத்திரிகை அட்டைகளை அச்சிட்டு சிலரை நேரில் சென்று அழைத்தும், மற்றவர்களை செல்போனில் ஆன்லைன் வழியே அழைத்தும் உள்ளனர். 

இதைதொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி நாய்களுக்கு மாலை அணிவித்து, திருமண சடங்குகள் அனைத்தும் நடத்தப்பட்டன. மேல தாளத்துடன், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். அந்த இடமே கோலாகலத்துடன் காணப்பட்டது. 

இதுகுறித்து, சவிதா தெரிவித்ததாவது, எனக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால், நானும் எனது கணவரும் செல்லப்பிராணிகளை வளர்த்து பாதுகாத்து வருகிறோம்.  எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால், ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வந்தோம். அதனால், ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வைக்கலாமே என்று பலரும் தெரிவித்ததனால், அதுபற்றி நாங்களும் யோசித்தோம்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hariyaana traditional marriage for pet animals


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->