ஒடிசாவில் பரபரப்பு.! மாணவிகள் கட்டாயம் "பாய் பிரண்ட்" வைத்துக்கொள்ள வேண்டும் -  கல்லூரி முதல்வர் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தகவல் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில், "காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பர்கள் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. 

ஆண் நண்பர்கள் இல்லாமல் தனியாக வரும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல், மாணவிகள் தங்கள் ஆண் நண்பருடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை காட்டவேண்டும்" என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோட்டீசில் எழுதப்பட்டுள்ளவைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அதில் கல்லூரி முதல்வரின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த மாணவ - மாணவிகள் அதிர்ச்சியடைந்து, சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வரிடம் தகவல் கொடுத்துள்ளனர். 

அதற்கு கல்லூரியின் முதல்வர், "தனது கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் தனது கையெழுத்துடன் போலியாக நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோட்டீஸ் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girls student must have a boyfriend in odisa notice viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->