கௌதம் அதானி, சரத் பவார் திடீர் சந்திப்பு.. 2 மணி நேரம் நீடித்த ரகசியம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதானின் குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவார் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது போல் ஹிண்டன்பர்க் அறிக்கை அமைந்துள்ளதாகவும், தவறு செய்திருந்தால் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

சரத் பாவாரின் இத்தகைய கருத்து எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம அதானி நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மகாராஷ்டிரா, மும்பையில் உள்ள சரத் பவார் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் கௌதம் அதானி சரத் பவாரை சந்தித்து இருப்பது எதிர்க்கட்சிகளின் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Adhani and Sarath Pawar meet in Mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->