யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற கும்பல்.!! கூண்டோடு பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற கும்பல்.!! கூண்டோடு பிடித்த போலீசார்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல், யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தங்களுள் ஒருவரை வாடிக்கையாளர் போல் அந்த கும்பலிடம் அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து அந்த கும்பலில் ஒருவர் அந்த வாடிக்கையாளரிடம், தன்னிடம் 14 கிலோ எடையுள்ள யானை தந்தம் இருக்கிறது. அதனை ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த நபரை கைது செய்தனர். 

அதன் பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர், தான் 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாகவும், சந்தனக்கடத்தல் வீரப்பனின் உறவினர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், இன்னும் நிறைய யானை தந்தங்களை தன்னால் வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்தார். 

இவர் அளித்த தகவலின் படி, போலீசார் விரைவாகச் செயல்பட்டு கும்பலை சேர்ந்த மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து யானைத் தந்தங்களை பறிமுதல் செய்து, அவற்றை தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for sale elephant Ivory in gujarath


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->