# Breaking || தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் 400  கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்..! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சட்ட சபையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் உரையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்து வருகிறார்.

இந்த பட்ஜெட்டில், பல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அதிக அளவில் கோவில்கள் இருப்பதால் அவற்றில் பல கோவில்கள் இந்து அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- "நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சுமார் 4,400 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four hundred temples kumbabishegam conduct in next financial year


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->