பெங்களூருவில் பரபரப்பு... கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் தொடர்புடைய இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று நடத்திய சோதனை முடிவில் ரூ.7.22 கோடி  பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சோப்பு தயாரிக்க தேவைப்படும் ரசாயன பொருட்கள் வாங்குவதற்கான ஒப்பந்த டெண்டரை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ரூ.81 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள பாஜக எம்எல்ஏவின் அலுவலகத்திற்கு வந்த அவருடைய மகன் லஞ்சப் பணம் வாங்கும் இப்பொழுது லோக் ஆயுக்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ மற்றும் அவருடைய மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 7.22 கோடி பணம் கைப்பற்றியதோடு பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் இன்னும் சிலர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் பணம் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷப்பாவை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்பொழுது காங்கிரஸ் கட்சியினரை கர்நாடக மாநில போலீசார் தடுத்து நிறத்தினர். இதனை அடுத்து கட்சியினருடன் சித்தராமையா சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனை அடுத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது செய்யப்பட்டு குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டார். இதன் காரணமாக பெங்களூர் மாநகரம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Karnataka CM Siddaramaiah Arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->