ஆந்திரா அருகே காரில் செம்மரம் கடத்திய ஐந்து பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு ஆந்திரா - தமிழக எல்லைப்பகுதியான சூலூர் பேட்டை அருகே ஆந்திரா போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த இரண்டு கார்களை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அதில், சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட 5 டன் எடை கொண்ட செம்மர கட்டைகள் மற்றும் செம்மர பவுடர் உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அவற்றை உடனடியாக பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முருகன், ஹேமந்த் குமார், ரவி, விமல், சுரேந்தர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து செம்மரங்களைக் கடத்தி சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மஞ்சள் தூள் ஏற்றுமதி செய்வது போல் செட்டப் செய்து லாரிகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for sandal tree kidnape in andira


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->