இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்..!! மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்..!! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தமிழகம் உட்பட இந்தியாவின் சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவின் சந்தை வாய்ப்பை பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பிரத்தியேக ஸ்டோரை திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன்படி இந்தியாவில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகலத்தில் பிரத்தியேக ஸ்டோரை அமைத்துள்ளது ஐபோன் நிறுவனம். 

இதனை ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இன்று திறந்து வைத்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஸ்டோர் திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஏராளமானவர்களை பார்த்த கையேசித்தபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் டிம் குக். சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு ஆப்பிள் ஸ்டோரை டிம் குக் திறக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Apple Store in India Inaugurated by Tim Cook in Mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->