நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க முயற்சி - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி அன்று, பார்வையாளர்கள் போல் வந்த இருவர் அவைக்குள் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதேபோல் நாடாளுமன்ற வெளிப்பகுதியிலும் இரன்று பேர் வண்ண புகை குப்பிகளை வீசினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது ’உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நால்வருக்கும் உதவி செய்த மற்றும் மூளையாக செயல்பட்ட லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் என்பவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாயின. 

அதாவது, அன்றைய தினம் தாங்கள் திட்டமிட்டவாறு எதுவும் நடக்கவில்லையெனில், ’பிளான் பி’ பெயரில் மாற்று திட்டங்களை வைத்திருந்தோம். அவற்றில் ஒன்றாக நாடாளுமன்ற வளாகம் அல்லது அவைக்குள், தங்கள் முழக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வீசிவிட்டு தீக்குளிக்க திட்ட மிட்டிருந்தோம்.

ஆனால், தீத்தடுப்பு ஜெல் வாங்குவதற்கு பணம் இல்லாததால் அந்த யோசனையை கைவிட்டு  விட்டோம். என்றுத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire on body in parliment accuest info


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->