பேரணி நிறுத்தி வைப்பு: ஆனால்... விவசாயிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் மற்றும் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் புறப்பட்டனர். 

ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைகளின் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதனால் போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடைத்தனர். கடந்த புதன்கிழமை 21 வயதான விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இவரது மறைவிற்கு போலீசார் தான் காரணம் எனவும், கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். 

அதுவரை உயிரிழந்த விவசாயின் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வருகின்ற 29ஆம் தேதி வரை விவசாயிகள், பேரணியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். 

அதே சமயத்தில் பஞ்சாப், அரியானா எல்லைகளில் அமர்ந்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த 21 வயதான விவசாயிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers protesters suspension 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->