பிரதமர் மோடியின் தாயார் மறைவு : அகமதாபாத் சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளனர். அதற்காக இன்று தமிழகத்தின் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று ௧௨ மணிக்கு புறப்படும் விமானத்தில் அகமதாபாத் செல்ல இருக்கிறார்.

அதேபோன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாயாரின் துக்கநிகழ்வில் கலந்துகொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு 11.15 மணிக்கு விரைந்தவர் அகமதாபாத்திற்குச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS went ahmedabad for PM Modi mother funeral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->