திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்! - Seithipunal
Seithipunal


திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு, மேற்கு வங்காள வங்கத்தில் நடைபெற்ற பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

மேற்கு வங்க மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஷஷி பஞ்சா, பழிவாங்கும் அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்து வருகிறது.

பா.ஜ.க இது போன்ற பழிவாங்கும் அரசியலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக செய்கிறது என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சிக்கு பழிவாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. 

மத்திய அமைப்புகள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சம்மன் அனுப்புகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி ஆக இருக்கும் அபிஷேக் பானர்ஜி இதற்கு முன்னதாக நிலக்கரி கொள்ளை வழக்கில் டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டும், கொல்கத்தாவில் 2022 ஆம் ஆண்டும் அமலாக்கத்துறையினால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement department summons Trinamool Congress general secretary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->