நேருக்கு நேர் மோதிய சரக்கு மற்றும் மின்சார ரெயில்.! பயணிகளின் நிலைமை என்ன? - Seithipunal
Seithipunal


நேருக்கு நேர் மோதிய சரக்கு மற்றும் மின்சார ரெயில்.! பயணிகளின் நிலைமை என்ன?

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புர்பா பர்டாமன் மாவட்டத்தில் ஹவுரா-பர்டாமன் வழித்தடத்தில் மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு சக்திகார் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. 

அப்போது, அதே வழித்தடத்தில் எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த சரக்கு ரெயில் மின்சார ரெயிலை இடித்து தள்ளியது. இதில் மின்சார ரெயில் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டது. இந்த சத்தம் கேட்டு ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், முதல் பெட்டியில் இருந்த ரெயில் பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். இரண்டு ரெயில்களும் ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

தடம் மாறும்போது ஏற்பட்ட தவறால் இரண்டு ரெயில்களும் ஒரே தடத்தில் வந்ததே இந்த விபத்துக்கான காரணம் என்பது தெரியவந்தது. இந்த விபத்தால் அந்த தடத்தில் இயக்கக கூடிய அனைத்து ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. 

மேலும், தடம்புரண்ட ரெயிலை தூக்கி நிறுத்தும் பணிகளும், பயணிகளை ரெயிலில் இருந்து மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே வழித்தடத்தில் நேருக்கு நேர் ரெயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electrical train derail in saktigarah junction in west bengal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->