சிறுவனை சிகிச்சைக்கு ஸ்ட்ரெச்சர் இல்லாமல் தள்ளுவண்டியில் அழைத்து சென்ற கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஹவுராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று அந்த ரெயில் ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு வந்தது. அந்த ரயிலில் கொல்கத்தா குடும்பம் ஒன்று சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். 

அந்த ரயிலானது புதுவைக்கு அருகில் வந்த பொழுது அதே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுவனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த கொல்கத்தா குடும்பத்தினர் என்ன செய்தவென திகைத்துள்ளனர். 

இதற்கிடையில், ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்துள்ளது. இருப்பினும், அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் உடைந்து காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நடைமேடைக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை. உடனே, சிறுவனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத காரணத்தால், அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை வைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து, சிறுவன் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not Pudhucherry child treatment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->