பாட்னாவில் "முதல்வர் நிதிஷ்குமார் உடன் டி.ஆர் பாலு" திடீர் சந்திப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வகையில் தமிழக காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவரை கைது செய்ய டெல்லிக்கு விரைந்தனர். அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பிகார் மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்த நிலையில் இன்று சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்புடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பிகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK TRBalu meet with Bihar CM NitishKumar in Patna


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->