இவர்களெல்லாம் திருப்பதிக்கு வர வேண்டாம்- தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு காணிக்கைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் 300 ரூபாய் தரிசன டிக்கெட், அங்கபிரதட்ணம் டிக்கெட் ஆர்ஜித சேவை உள்ளிட்ட தரிசனத்திற்கான டிக்கெடுகள் திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பக்தர்கள் சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

இதனையடுத்து இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மற்றும் திருப்பதிக்கு வர வேண்டும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், நேரடி இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees not allowed in Thirupathi Direct free tharisanam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->