இந்தியாவில் ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா.?! அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு.?! - Seithipunal
Seithipunal


2 வருடங்களாக நாட்டையே உலுக்கி வந்த கொரோனா பெருந் தொற்று  தற்காலங்களில் மிகவும் குறைவடைந்த நிலையில் தற்போது  இந்தத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உலகையே கதி கலங்கச் செய்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. தற்போது இந்தத் தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில்  இந்தியாவில் இது அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் ஒரே நாளில் 1590 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. 146 நாட்களுக்குப் பிறகு 1590 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8601 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்  இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள்  விதிக்கப்படுமா  என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covid infection caes is on the rise govt will impose strict rules


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->