வன்முறையை தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவு..! - Seithipunal
Seithipunal


நேற்று காங்கிரஸ் கட்சி சர்ச்சைக்குரிய படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த புகைப்படம் காக்கி அரைக்கால் சட்டையில் தீப்பிடிப்பதை போன்று இருந்தது மட்டுமல்லாமல், அந்த அரைக்கால் காக்கி சட்டை படத்தை பகிர்ந்த காங்கிரஸ் கட்சி "அதனுடன் வெளியேற இன்னும் 145 நாட்கள் மட்டுமே உள்ளன" என்ற வாசகத்தையும் வெளியிட்டு இருந்தது. 

மேலும் காங்கிரஸ் கட்சி 'வெறுப்புணர்வில் இருந்து நாட்டை விடுவித்து பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். செய்த தவறுகளை திருத்துவோம். படிப்படியாக இலக்கை அடைவோம்' என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்ததாவது:- "காங்கிரஸ் கட்சி வன்முறையை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்டுள்ளது. ஆனால் நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. அந்த பதிவை காங்கிரஸ் கட்சி உடனடியாக நீக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும், நெருப்புக்கும் ஏற்கனவே தொடர்பு உள்ளது. 

கடந்த 1984-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட வன்முறையில் பஞ்சாப் கொழுந்து விட்டு எரிந்தது. சீக்கியர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். கேரளாவில் பல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு தான் ராகுல்காந்தி இப்போது நடைபயணம் மேற்கொள்கிறார். 

தென் மாநிலங்களில் தங்களின் அரசியல் எதிரிகளை குறி வைக்க காங்கிரஸ் கட்சி சிக்னல் கொடுக்கிறது. இது வன்முறையையும், படுகொலை சம்பவங்களையும் வெளிப்படையாக தூண்டும் செயலாகும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress twitter post inciting violence


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->