#ViralVideo : நான் தமிழன், நிருபரின் கேள்விக்கு ராகுல்காந்தி அளித்த நச் பதில்..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களின் கேள்விக்கு தான் ஒரு தமிழன் என ராகுல் காந்தி பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் எதிர்கட்சிகள் சார்ப்பில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி விவாதத்தை தொடங்கி வைத்தார்.

அவர் பேசும் போது, தமிழகத்தை பார்த்து மாநில சுயாட்சியை இந்தியா முழுமையும் கற்றுகொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து, அவர் நாடாளுமன்றத்தை விட்டு செல்லும் போது நிருபர் ஒருவர், உரையில் அதிகம் தமிழ்நாட்டை குறித்து பேசினீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு ராகுல்காந்தி தான் ஒரு தமிழன் என பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mp rahul gandhi tamilan speech video viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->