ஆம் ஆத்மி கட்சி குறித்து காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் பேட்டி! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், ஆம் ஆத்மியை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ''ஆம் ஆத்மி கட்சியை நம்ப முடியாது என்பதை நாங்கள் நிலைப்பாடாக கொண்டுள்ளோம். 

அவர்கள் ஊழல் கலந்த நேர்மையற்ற அரசியலை செய்கிறார்கள். அவர்களிடம் பொருளாதார வளர்ச்சி குறித்து எந்த கொள்கையும் கிடையாது. 

அவர்களின் கவனம் எல்லாம் இலவசங்களை வழங்குவதில் மட்டுமே உள்ளது. பொய் பேசுவதற்கு அவர்கள் எப்போதுமே தயாராகவே இருக்கிறார்கள். 

நாங்கள் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தெரிவிக்கவில்லை. நாங்கள் ஏழு தொகுதிகளுக்கும் தயார் என்று தான் தெரிவித்தோம். 

யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது கூட்டணி அமைந்ததும் முடிவு செய்யப்படும். காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சியை வலுப்படுத்துவதற்காகவே ஆலோசனை நடத்தப்பட்டது. 

மற்றபடி ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை'' என தெரிவித்தார். பாஜகவை வலுவுடன் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து 'INDIA' கூட்டணியை உருவாக்கியுள்ளன. 

இந்த கூட்டணி பாஜகவுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது மற்றும் கட்சி அமைப்பு ரீதியில் வலுப்படுத்துவது போன்றவை தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். 

இதன் பிறகு அல்கா லம்பா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எங்களுக்கு டெல்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார். 

INDIA கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே அவர் வெளியிட்ட இந்த தகவலால் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader Sandeep Dixit opinion about Aam Aadmi 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->