ஒற்றுமையாக உழைத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிபெறும் - மல்லிகார்ஜுன் கார்கே.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பெற்றார். இவர் நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு வந்தார். அங்கு அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கார்கே தெரிவித்ததாவது:-  "இமாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை  தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று, கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நான் உள்ளேன். அந்தவகையில் எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருந்து வருகிறார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

நாம் ஒற்றுமையாக உழைத்தால் கர்நாடக மாநிலத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அப்படி இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம். 

மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் கட்சியின் மேலிடம் தீர்மானிக்கும்" என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader mallikarjune kharke speach in karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->