புதிய சர்ச்சை... திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டி அடிங்க... பாஜக தலைவர் பேச்சுக்கு கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் எலாம்புர்காவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் திப்பு சுல்தான் வாரிசுகளை விரட்டியடித்து ராமர் மற்றும் அனுமன் வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விழா மேடையில் பேசிய அவர் தாங்கள் ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் என்றும் திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் இல்லை என்றும் பேசி உள்ளார்.

மேலும் பேசிய அவர் எதிர்வரும் கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திப்பு சுல்தான் ஆதரவாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமா..? ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் வேண்டுமா..? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள் என்று பேசியுள்ளார்.

திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக் கூடாது என்று பேசிய அவர் ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நளின் குமார் தெரிவித்துள்ளார். 

கர்நாடக பாஜக தலைவர் நளின் குமாரின் இத்தகைய பேச்சு இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இடையே மதவெறுப்பை தூண்டும் வகையில் உள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Condemnation against KA BJP leader spoke to incite religious riots


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->