பந்தயம் கூடாது.."ஆன்லைன் விளையாட்டுக்கு தடை".. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


பந்தய நோக்கத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இது பற்றி கூறுகையில் "ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் பந்தயத்துடன் கூடிய விளையாட்டுகளுக்கு மத்திய அரசு சார்பில் ஊதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பந்தயத்துடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் பன்முக சுய கட்டுப்பாடு அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவன பிரதிநிதிகள் உள்ளடக்கியதாக சுய கட்டுப்பாடு அமைப்பு இருக்கும். இந்த அமைப்பை உருவாவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்புகள் எத்தனை ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்க கூடாது என்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியதாகும். ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுத்தவரை அவற்றிற்கு அனுமதி வழங்குவதில் எளிய நடைமுறை பின்பற்றப்படும். 

அவ்வாறு அனுமதிக்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் பந்தயத்துடன் கூடியதா? இல்லையா? என்பதுதான் அதில் முக்கியம். பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் இருப்பின் அதற்கு அனுமதி வழங்கப்படாது என சுய கட்டுப்பாடு அமைப்பு நிராகரித்து விடும்" என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt decides to ban online games with betting


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->