கார்டூனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.! - Seithipunal
Seithipunal


பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பல ஊக்கமளிக்கும் வகையிலும், நகைச்சுவையான பதிவுகளையும் பதிவிடுவது வழக்கம். இதற்காகவே, டுவிட்டரில் அவரை ஒரு கோடி பேர் பின்தொடருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள டுவிட் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

அந்த பதிவில், மொபைல் போனுக்கு அடிமையானதன் விளைவை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான வரைபடம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில் காப்பகத்தில் முதியோர் சிலர் உள்ளனர். அவர்கள், அந்த காலங்களை கடந்த பின்னரான முதியவர்கள். 

நாம் வயது முதிர்ந்த பிறகு, மொபைல் போனை பிடிக்கும்போது எப்படி இருப்போமோ, அதனை போன்றே உடல் முன்னோக்கி வளைந்து காணப்படுகின்றனர். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்று வேதனை தெரிவித்துள்ள அவர், இந்த பதிவை பதிவிட்ட பின்னர் தனது மொபைல் போனை தூர வைத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஞாயிற்று கிழமை எனது கழுத்து நேராக இருக்கும்படியும், தலை மேல்நோக்கி நிமிர்ந்து இருக்கும்படியும் பார்த்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Businessman Anand Mahindra shock watching cartoon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->