திருமணத்தில் மணமக்களின் தலையை முட்ட வைத்த வினோத சம்பவம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருமணத்தில் மணமக்களின் தலையை முட்ட வைத்த வினோத சம்பவம் - எங்குத் தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்ற பெண்ணுக்கும்  நேற்று பல்லசேனா பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு தெரிவித்தனர். அப்போது உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை பிடித்து முட்ட வைத்தார்.

இதில் மணமகள் வலி தாங்க முடியாமல் அழுதார். அதன் பின்னர், உறவினர்கள் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர். இதுகுறித்து உறவினர் ஒருவர் தெரிவித்ததாவது, "இப்படி மணமக்களின் தலையை முட்டச் செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 

அந்தக் கிராமத்தில் முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

கேரளா மாநிலத்தில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள் இருக்கும் நிலையில், 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bride cry marriage function in kerala photo viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->