கர்நாடக துணை முதல்வரை நேரில் சந்தித்த பாஜக எம்.பி - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வடமாநிலங்களில் பாஜக அரசு ஆட்சி செய்தும், ஆட்சியை பிடிக்கும் நோக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை அவ்வப்போது குற்றம் சாட்டியும் வருகிறது. 

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் கர்நாடகா பாஜக எம்.பியான தேஜஸ்வி சூர்யா, மாநிலத்தின் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த எதிர்பாராதவிதமான சந்திப்பு என்ன காரணத்திற்காக, என்ற கேள்வி இருகட்சியினரிடம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- 

"பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா இன்று என்னை உள்துறை அலுவலகத்தில் சந்தித்து பல பிரச்சினைகளை விவாதித்தார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பு கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp tejeshvi surya meet karnataga vice cm dk sivakumar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->