பாஜக முக்கிய தலைவர் ஈஸ்வரப்பா கட்சியில் இருந்து திடீர் நீக்கம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியுடன் நீண்ட அனுபவம் கொண்டவர்ம் அதுமட்டுமல்லாமல், பி.எஸ். எடியூரப்பா போன்ற பிற முக்கிய தலைவர்களுடன் மாநிலத்தில் கட்சியை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். 

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகும் முடிவுக்குக் கட்டுப்பட்டதால், கட்சியின் மத்திய தலைமையால் பாராட்டப்பட்டார். இருப்பினும், தனது மகன் காந்தேஷூக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கேட்டு மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. 

இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது மகனுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான். அவரது குடும்ப கட்டுப்பாட்டில் மாநில பாஜக இருக்கிறது. இதை உடைத்தெறிய வேண்டும் என்று அறிவித்து ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.

இந்த நிலையில், ஈஸ்வரப்பா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக தேர்தலில் களம் காண்பதாலும் அவரை பாஜக தலைமை ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader ks eswarappa dissmiss from bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->