#BREAKING :: பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவ சிலைக்கு ரத்தத்தால் அபிஷேகம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தை அடுத்த மாண்டியா மாவட்ட விவசாயிகள் கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கடந்த 52 நாட்களாக விவசாய சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை விவசாயிகளை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயத் தலைவர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவ சிலைக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்து தங்களது ஆதங்கத்தை  வெளிப்படுத்தியுள்ளனர்.

கர்நாடக விவசாயிகள் முதல்வர் பசவராஜ் பொம்மை உருவ சிலையை உருவாக்கி போராட்டக் களத்தில் கொண்டு வந்து விவசாயிகளின் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை சேமித்து அதனை முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவப் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்தனர். 

கரும்புக்கு விலை நிர்ணயம் செய்த அரசை கண்டித்து மண்டியா விவசாயிகள் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை கர்நாடகாவை ஆளும் பாஜக அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் மீது அரசு அலட்சியம் காட்டி வருவதாக அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவ சிலையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அடுத்த வருடம் கர்நாடகா சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளின் போராட்டம் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Chief Minister Basavaraj bommai idol anointed with blood


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->