பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது உண்மையா.? தமிழகம் வரும் அதிகாரிகள் குழு..!! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற சில வீடியோக்களை மர்ம நபர்கள் சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் அச்சமடைந்த வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர். இந்த வீடியோக்கள் உண்மை இல்லை என்று தமிழக காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது. 

இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையிலும் எதிரொளித்தது. பீகார் மாநில எதிர்க்கட்சியாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாக்குவதாக குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் கடும் அமலியில் ஈடுபட்டனர். இதற்கு அம்மாநில துணை முதல்வர் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும் இது குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து உண்மை நிலையை கண்டறிய பீகார் மாநில உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழகம் வர உள்ளது. இது குறித்தான அறிவிப்பை அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் மார்ச் 11ஆம் தேதி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பீகார் காவல்துறையினர் அடங்கிய குழு தமிழகத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar govt constituted an inquiry committee into assault on Bihar workers


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->