இரவில் காதலிக்க ஊருக்கே பியூஸ் புடுங்கிய சிங்கப்பெண்! பஞ்சாயத்தார் எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், இருட்டில் தனது காதலனைச் சந்திப்பதற்காக தனது கிராமம் முழுவதும் மின் இணைப்பை துண்டித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பாரனில் பெட்டியாவை சேர்ந்த ப்ரீத்தி குமாரி தன் காதலன் ராஜ்குமாரை சந்திக்க ஒவ்வொரு முறையும் தனது கிராமத்தில் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் இருவரும் கிராம மக்களால் கையும் களவுமாக பிடிபட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ப்ரீத்தி குமாரி மற்றும் ராஜ்குமார் சந்திக்க கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கும் சம்பவத்தால் மேற்கு சம்பாரனில் உள்ள இரு கிராமங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், உண்மையில் என்ன காரணம் என்பதை அறிய கிராம மக்கள் சிரமப்பட்டனர். ப்ரீத்தி குமாரி தினமும் இரவில் அந்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்து வந்ததால் கிராமத்தில் பல திருட்டு சம்பவங்கள் நடந்தன. அந்தப் பெண்ணால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக கிராம மக்கள் மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று காத்திருந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து காதலன் ராஜ்குமாருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் ப்ரீத்தி குமாரி தன் காதலனை கிராம மக்கள் தாக்க விடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராஜ்குமாரை கிராம மக்கள் தடியால் தாங்குவதும், அவரை காதலி ப்ரீத்தி குமாரி காப்பாற்ற முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. பின்னர், இரண்டு கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்களும், பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தி ராஜ்குமாருக்கும் ப்ரீத்தி குமாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்த இறுதியாக இவர்களது திருமணம் உள்ளூர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இதன்பிறகு கிராமத்தில் மின்தடை இருக்காது என பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar girl cuts village power supply to meet lover


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->