3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயர் பதவி தகுதி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


பீகாரில் 3 குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயராக பதவி ஏற்ற ராக்கி குப்தா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில் பீகார் மாநில தேர்தல் ஆணையம் 3 குழந்தைகள் இருப்பதை மறைத்த ராக்கி குப்தா என்ற பெண் மேயரை பதவி நீக்கம் செய்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சப்ரா நகர் மேயராக ராக்கி குப்தா என்பவர் பதிவுயேற்றார். இதில் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் ராக்கி குப்தா 2 குழந்தைகளை பற்றிய தகவல்களை மட்டுமே அளித்து, மூன்றாவது குழந்தையை மறைத்துள்ளார்.

இதனை மோப்பம் பிடித்த எதிர்க்கட்சிகள் ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருப்பதாக பீகார் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆனாலும் ராக்கி குப்தா அவர் என்னுடைய குழந்தை இல்லை என்றும் உறவினர்களால் தத்தெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குழந்தையின் ஆதார் விவரங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியரின் பெயர்கள் பெற்றோர்களாக உள்ளன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து மேயர் ராக்கி குப்தா பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் புதிய மேயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhihar Mayor cancel for 3 babys


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->