மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் பதற்றம்..!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம் கூச் பெஹரில் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமாணிக் பாஜக அலுவலகத்திற்கு சென்ற பொழுது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் மத்திய அமைச்சரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை அடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக மத்திய அமைச்சர் பிரமாணிக் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கும் பொழுது பொதுமக்கள் நிலையை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரமாணிக் எதிராக போராட்டம் நடத்தப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Union Minister car in West Bengal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->