கரூரை மிஞ்சிய மேற்கு வங்கம்.. சோதனைக்கு சென்ற "ED அதிகாரிகள்" கொடூர தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலான தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பர்கானாஸ் மாட்டத்தின் சந்தேஷ்காலி கிராமம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மண்டல அளவிலான தலைவர்களான ஷாஜகான் ஷேக், சங்கர் ஆதியா ஆகிய இருவரின் வீடுகளுக்கு சோதனை நடத்த சென்ற போது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாஜகான் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாநில அமைச்சர் ஜியேதிபிரியோ மல்லிக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில்  அதிகாரிகள் சென்ற கார் கண்ணாடிகள் தாக்கப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அவர்கள் மீது திமுக கவுன்சிலர் உள்ளிட்ட திமுகவினர் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack on ED officers in west bengal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->