டெல்லி மதுபான வழக்கு - உச்சநீதி மன்றத்தில் கேஜ்ரிவால் மேல் முறையீடு.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு மற்றும்  சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, கேஜ்ரிவால் தான் கைது செய்யப்பட்டதையும், அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டதையும் சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி சுவர்ண காந்தா சர்மா அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravind kejriwal appeal supreme court for arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->