ஆந்திரா | ராயகடா ரெயில் விபத்துக்கான காரணம்: வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற கொடூரமான ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 

ரயில் விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ரெயிலின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுநரின் தவறால் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

7 பேர் கையொப்பமிட்ட ஆய்வாறிக்கையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள், கிடைத்த ஆதாரங்கள், அதிகாரிகள் வழங்கிய அறிக்கை போன்றவை மிக கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

ரயிலில் இருந்த ஓட்டுனர்கள் தவறான சிக்னலை வழங்கியதால் ரயிலின் பின்புறம் விசாகப்பட்டினம் பாலசா பயணிகள் ரயில் மீது மோதியது என தெரியவந்துள்ளது. 

ராயகடா ரயிலில், ரயில்வே விதிகளின்படி 2 நிமிடங்களுக்கு நின்று பின்னர் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்க வேண்டும். 

ஆனால் ரயில் நிற்காமல் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பாலசா ரயிலின் மீது மோதியது. 

இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra rayagada train accident crew reason


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->