"இந்த பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல.. பேசுனதே பொய்." 2023 பட்ஜெட் பற்றி புட்டுபுட்டு வைத்த ஆனந்த் சீனிவாசன்.!  - Seithipunal
Seithipunal


நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கியது. இந்த நிலையில், 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டிற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி இருக்கின்றார்.

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், " பட்ஜெட் துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன். இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என. இப்பவும் சொல்றேன் இந்த பட்ஜெட்ல ஒண்ணுமே இல்ல. பெண்களுக்கான புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பெண்களுக்காக நிறைய செயல்பட்டு விட்டோம் என்றும் அவர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்கள். உலகிலேயே இந்தியாவில் தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு உழைக்கின்ற பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. சவுதி அரேபியா கூட அதற்கு பரவாயில்லை. 

பெண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டோம் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பெண்களின் பங்கு பெரிதும் உள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறு. நடுத்தர குடும்பத்தினரின் சேமிப்பை தடுக்கும் விதமான பட்ஜெட் இது. 

ரயில்வே மேம்பாட்டுத்திற்காக 2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி போதுமானதாக இருக்கும். சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டிருந்த திட்டத்தில் போதுமான அளவு வசதிகள் இல்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து எதுவுமே பேசவில்லை. 

தங்க இறக்குமதி மீதான வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்க கடத்தல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவுள்ளது. 5 சதவீதம், 10 சதவீத வரிகளை அனைத்தையும் ரத்து செய்து விட்டு மொத்தமாக 25 சதவிதமாக வரியை மக்கள் தலை மேல் ஏற்றி உள்ளீர்கள். இது எப்படி ஒரு சரியான பட்ஜெட்ன்னு சொல்ல முடியும்.?" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ananth srinivasan about 2023 Budget


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->