ஜம்மு காஷ்மீருக்கு அமித் ஷா திடீர் பயணம்.!! - Seithipunal
Seithipunal


ஜம்முவின் பூன்ச்  மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஜம்மு காஷ்மீர் நிலா குறித்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ளார். அங்கு எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் அவர் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah surprise visit to Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->