#BigBreaking || அகுவானி - சுல்தாங்கஞ்ச் பாலம் 2வது முறையாக இடிந்து விழுந்தது..!! - Seithipunal
Seithipunal


பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் மற்றும் அகுவானி காட் பகுதியின் இடையே பாலம் கட்டும் பணி 2014ல் தொடங்கிய நிலையில்  2019ம் ஆண்டு முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிறைவு பெறாமல் கட்டப்பட்டது வருகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இடியுடன் கூடிய மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பலத்த காற்றின் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ரூ. 1,710 கோடி செலவில் கட்டப்படும் கட்டுமானப் பாலம் பலத்த காற்றை கூட தாக்க பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது விவாத பொருளானது.

இது குறித்து அப்போது பேசி இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பீகாரில் ஒரு பாலம் விழுந்த காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டேன். பலத்த காற்றின் காரணமாக ஏற்பட்டதாகக் விளக்கமளித்தார்கள். பலத்த காற்றினால் பாலம் எப்படி இடிந்து விழும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகள் செய்த சில தவறுகள்தான் பாலம் இடிந்து விழுவதற்கு வழிவகுத்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதே பாலம் இன்று இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூரில் கட்டுமான பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் தருணத்தை அப்பகுதி மக்கள் வீடியோவில் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akwani Sultanganj bridge collapses for the 2nd time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->