நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் - புதுவையில் வைத்துள்ள பேனரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் - புதுவையில் வைத்துள்ள பேனரால் பரபரப்பு.!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்க்கு ஜூன் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் புதுச்சேரி மாநிலத்தில் வாழ்த்து போஸ்டர்கள், பல்வேறு விதமான பேனர்கள் வைத்து பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே வைத்துள்ள பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பேனரை உருளையன்பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர். 

அந்தப் பேனரில், நடிகர் விஜய் மேடையில் மைக் முன்பு நின்று பேசுவது போன்றும், அதன் பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போன்றும் அமைத்துள்ளனர். 

மேலும், அந்த பேனரில் வருகிற 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்" என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். 

அந்த வீடியோவில் பின்னால் பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என்று கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என்று பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay birthday celebration in puthuchery photo viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->