கர்நாடக "லவ் ஜிஹாத்"விவகாரத்தில் அமைச்சர் வீடு முற்றுகை.. ABVP அமைப்பினரால் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத் என்பவரின் மகள் அவரது கல்லூரியில் முன்னாள் மாணவன் ஃபயாஸ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் லவ் ஜிகாத் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். 

ஹுப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த நேகா என்ற மாணவி கடந்த வியாழக்கிழமை முன்னாள் மாணவர் பயாஸ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய மகள் லவ் ஜிகாத் காரணமாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக நிரஞ்சன் குற்றம் சாட்டியிருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகம் பரவி கிடைப்பதாக நிரஞ்சன் குற்றம் சாட்டியதை அடுத்து ஆளும் காங்கிரஸ் அரசும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் இல்லத்தை அகில இந்திய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரை கர்நாடக மாநில போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ABVP workers protest front of Karnataka Home minister house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->