கர்நாடகா: தனியார் வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பேகூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த வங்கிக்கு வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்தபோது, ஒருவர் நேரடியாக வங்கி மண்டல மேலாளரான திவ்யா இருக்கும் அறைக்கு சென்றார். 

பின்பு திடீரென அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். மேலும் அந்த சமயத்தில் அபாய ஒலி எழுப்பும் சுவிட்சை ஆன் செய்துததால் பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

ஆனால் அவரை கிளை மேலாளர் உமேஷ் விரட்டி சென்றதுடன் திருடன், திருடன் என கத்தியால் அப்பகுதியில் இருந்தவர்கள் மர்மநபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து அந்த மர்ம நபரை பொம்மனஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். 

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே வங்கிக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக வந்து சென்றவர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man who tried to rob a private bank was arrested in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->