சுட்டெரிக்கும் கோடை வெயில்... நடந்தே சென்ற 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நடந்தே சென்ற 9 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத்(21). 9 மாத கர்ப்பிணியான இவர், உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக நெடுஞ்சாலை பகுதிக்கு நடந்து வந்துள்ளார். பின்பு அங்கு இருந்து ஆட்டோ மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். 

இதையடுத்து அங்கிருந்து மீண்டும் ஆட்டோ மூலம் நெடுஞ்சாலைக்கு வந்த சோனாலி வாகத் அங்கிருந்து கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு நடந்தே வந்துள்ளார். இதனால் சோனாலி வாகத்துக்கு உடல்நிலை மோசமானதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும், வயிற்றில் இருந்த ஒன்பது மாத குழந்தையும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் 9 மாத கர்ப்பிணி பெண்ணான சோனாலி வாகத், வெயிலில் ஏழு கிலோமீட்டர் நடந்ததால் உடல்நலம் மோசமாகி உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் பாததே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 9 month pregnant woman was killed while walking in the sun in Maharashtra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->