ஹிந்தி பேசத் தெரியாதா, அப்போ நீ....! லெஃப்ட், ரைய்ட் வாங்கிய நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் இந்திய வங்கிகளின் 75வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்மலா சீதாராமன் பேசியதாவது: "வங்கிகளில் உள்ளூர் மொழி பேசத்தெரிந்த ஊழியர்கள் கட்டாயம் நியமிக்க வேண்டும். வங்கிகள் பணம் பெற்று, கடன் கொடுத்து வியாபாரம் செய்கின்றன.

வங்கிகள் மக்களிடம் உயர்ந்த மதிப்புகளை உருவாக்கவில்லை. வங்கிகளின் கிளை அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், உள்ளூர் மொழி பேச தெரியாதவர்களை நியமித்து உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியாதா, அப்போது நீ இந்தியன் இல்லை என்று தேசப்பற்றோடு சொல்வதெல்லாம் போதும்.

இது போன்று பேசுவது வங்கிகளின் வியாபாரத்திற்கு உதவாது. நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. அதனால், இதுபோன்று உள்ளூர் மொழி பேசத்தெரிந்த ஊழியர்கள் இருப்பது அவசியம்.

அவர்களை பணிக்கு எடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒருவரை கிளைமட்ட அளவில் வங்கிகள் நியமிக்கும்போது அந்த பகுதி மக்களின் மொழியை பேசக்கூடியவரா என்பதை உறுதி செய்து நியமிக்க வேண்டும்.

உள்ளூர் மொழி தெரியாத நபரை வாடிக்கையாளர்களை கையாளுவதற்கு நியமிக்கக்கூடாது. அவ்வாறு நியமிக்கும் முன் வங்கி நிர்வாகம் அதிகமான முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் உருவாக ஊக்கப்படுத்த வேண்டும்.

நான் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம். மிகுந்த உற்சாகத்துடன் நாம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களை எந்த இடத்தில் சந்தித்தாலும் விதிமுறைகளை மட்டும் மாற்றாமல் அவர்களுடன் வங்கி வியாபாரம் பற்றி பேசலாம்" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th AGM of Banks nirmala seetharaman speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->