பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை தவறவிட்ட 36 மாணவிகளுக்கு  பனிஷ்மென்ட்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம் உள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய நூறாவது 'மான் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் 36 மாணவிகள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் எட்டு பேர் முதலாம் ஆண்டு மாணவிகளும் என தெரியவந்தது.

 இதனையடுத்து மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் ஒரு வாரத்திற்கு விடுதியை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

36 nursing students punishment in Chandigarh for missed Maan ki baat program


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->