மக்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்! - Seithipunal
Seithipunal


மக்களவையில் பதாகைகளுடன் அமளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

காங்கிரசை சேர்ந்த டி.கே. சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் ஆகிய மூன்று பேரும் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவித்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க் கட்சி எம்.பிகளின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 2 எம்.பிகளை இடைநீக்கம் செய்த நிலையில் இன்று எதிர்க்கட்சி எம்பிகள் இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மக்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகளில் மொத்தம் 138 பேர் உள்ள நிலையில் இதுவரை 100 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அதில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 38 பேர் மீதமுள்ளனர். தி.மு.கவின் 24 எம்.பிகளில் 16 பேரும் திரிணாமுல் காங்கிரசின் 28 எம்.பிகளில் 13 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலங்களவையில் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 more MPs suspended from Lok Sabha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->